Srishakthi M, TNAU, Coimbatore

வேளாண் சூழலியல் மற்றும் அதன் சவால்கள்

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்”

என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, உழவே இந்த உலகிற்கு உணவினைப் பகிர்ந்து அளிக்கிறது.

வேளாண் சூழலியல் என்பது சூழ்நிலை மற்றும் சமூக யதார்த்தங்களை உணவு சார்ந்த இறையாண்மையாகக் கருதப்படும் ஒரு வேளாண்மை முறையாகும். நடைமுறையில், இந்த வேளாண் சூழலியல் மிகவும் பலனளிக்கக் கூடியதாகவுள்ளது. ஏனெனில், இதுவும் நீண்ட காலத்திற்குச் செயல்படும் ஒருவகையான வளங்குன்றா வேளாண்மை முறையே. மேலும், இது கீழ்நிலை மற்றும் பிராந்திய செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்டு, உள்ளூர் பிரச்சனைகளுக்குச் சூல்நிலைப்படுத்தப்பட்ட தீர்வுகளைக் கண்டறிய உதவுகிறது. வேளாண் சூழலியல் உற்பத்தியாளர்களையும், சமூகங்களையும் ஒரு நல்ல மாற்றத்தின் முக்கிய முகவர்களாக மேம்படுத்துகிறது. வேளாண் சூழலியலானது உணவு மற்றும் விவசாய முறைகளை ஒருங்கிணைந்த வழியில் மாற்ற முற்படுகிறது.

வேளாண் சூழலியலுக்கான பத்து கூறுகள்:

1. பல்லுயிர்த்தன்மை (diversity):

வேளாண் சூழலியலுக்கான அமைப்பே பன்முகத்தன்மை கொண்டது. பல்லுயிர்கள் அதிகரிப்பதால் உற்பத்தி, சமூகம், பொருளாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த நன்மைகள் கிடைக்கின்றன.

2. இணை உருவாக்கம் மற்றும் அறிவின் பகிர்வு (Co-creation and sharing of knowledge):

இணை உருவாக்கும் செயல்முறையின் மூலம், வேளாண் சூழலியலானது பாரம்பரிய மற்றும் சுதேசிய அறிவு, தயாரிப்பாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் நடைமுறை அறிவு மற்றும் உலகளாவிய அறிவியல் அறிவு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.

3. கூட்டியக்கங்கள் (synergies):

வேளாண் சூழலியல், பயிர்கள், கால்நடைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள், மரங்கள், மண், நீர் மற்றும் பண்ணைகளில் உள்ள பிற கூறுகளை ஒருங்கிணைத்து கூட்டியக்கங்களை மேம்படுத்துகின்றன.

4. செயல்திறன் (efficiency):

உயிரியல் செயல்முறைகளை மேம்படுத்துவதன் மூலம், மறுசுழற்சி செய்வதன் மூலமும், உற்பத்தியாளர்களால் வெளிப்புற வளங்களைக் குறைவாகவும், செலவுகளைக் குறைக்கவும் வேளாண் சூழலியலால் முடிகிறது.

5. மறுசுழற்சி (recycling):

கரிம மறுசுழற்சி பொருட்கள் மற்றும் துணை பொருட்கள் வேளாண் சூழலியலில் சிறந்த திறனை வழங்குகிறது. அதீத மறுசுழற்சி என்றால் குறைந்த பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் செலவுகள் கொண்ட விவசாயம் என்றே கருத்திற்கொள்ளலாம்.

6. நெகிழ்திறம் (resilience):

பன்முகப்படுத்தப்பட்ட வேளாண் சூழலியல் அமைப்புகள் நெகிழ்திறம் கொண்டவை. வறட்சி, வெள்ளம், சூறாவளி போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளையும், பூச்சிகள் மற்றும் நோய்களின் தாக்குதல்களையும் சமாளிக்கக் கூடிய அதிக திறன் வேளாண் சூழலியலுக்கு உண்டு.

7. மனித மற்றும் சமூக மதிப்புகள் (human and social values):

வேளாண் சூழலியல் மனித மற்றும் சமூக மதிப்புகளுக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது. கண்ணியம், சமத்துவம், சமூக நீதி போன்ற அனைத்து மேம்பட்ட வாழ்வாதாரங்களுக்கு பங்களிப்பு செய்கிறது. இவற்றின் மூலம் வளங்குன்றா வளர்ச்சி குறிக்கோள்களை அடைய வழிவகுக்கின்றது.

8. கலாச்சாரம் மற்றும் உணவுப் பரிமாற்றங்கள் (Culture and food traditions):

வேளாண் சூழலியலானது பாரம்பரியம் மற்றும் நவீன உணவுப் பழக்கங்களில் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில், மக்களுக்கும் உணவுக்கும் இடையிலான உறவினை வளர்க்க முற்படுகிறது.

9. பொறுப்புள்ள ஆளுகை (Responsible governance):

ஊரகங்களிலிருந்து, தேசிய முதல் உலகளாவிய நிர்வாக வழிமுறைகள் வேளாண் சூழலியலுக்குத் தேவையாக உள்ளது. இவற்றின் மூலம் நாம் நிலைத்த, நீடித்த உணவு மற்றும் விவசாயத்தினைக் கையாள முடியும்.

10. ஒற்றுமையுடைய சுழலும் பொருளாதாரம் (Circular and solidarity economy):

தயாரிப்பாளர்களையும், நுகர்வோர்களையும் வேளாண் சூழலியல் இணைத்து உள்ளூர் சந்தைகளுக்கு முன்னுரிமையை அளித்து, நல்ல சுழற்சிகளை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்துகிறது.

இவையல்லாது, வேளாண் சூழலியலுக்குச் சில சவால்களும் உள்ளன. இவ்வித வேளாண் முறை உள்ளூர் மக்களின் படைப்பாற்றலை ஒட்டியே அமைகிறது. எனவே, நாம் ஒருமித்த வழிமுறைகளைப் பயன்படுத்த இயலாது. இதற்காக மனித சமூகம் பெருவாரியாக உழைக்க வேண்டி உள்ளது. பல்லுயிர்த்தன்மையை உருவாக்க ஆண்டுகள் ஏற்படும். அதற்கான காத்திருப்பு இந்த அவசர உலகத்தில் எதிர்பார்ப்பது கடினமே. சிறு, குறு விவசாயிகள் எல்லோரும் அன்றாட தேவைகளுக்காகவே வாழும் பொருளாதார சுமையுடன் உள்ளதால், வேளாண் சூழலியல் என்னும் வேளாண் முறைக்கு மாறுவது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இந்த வேளாண் முறை உள்ளூர்ச்சந்தைகளை மையப்படுத்தியே அமையப்பெற்றுள்ளது. எனவே, ஏற்றுமதி குறித்த திட்டமிடலுக்கு பல்வேறு ஆராய்ச்சி தேவைப்படுகிறது. மேலும், இந்த வகை வேளாண் முறை குறித்த எந்தவித விழிப்புணர்வும் உழவர்கள் மத்தியில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

சவால்களைத் தாண்டியும் இந்த வேளாண் சூழலியல் மிகுந்த பயனளிக்கக்கூடிய வேளாண் முறையாகும். இது நெடுங்காலந்தோட்டே நம் உலகில் உள்ளது என்பதற்கான சான்றுகள் உள்ளன. வேளாண் சூழலியல் ஒருமித்த வளர்ச்சியினை உண்டாக்கவல்லது என்பதில் ஐயமில்லை.

உழுவோம்! உழைப்போம்! உயர்வோம்!

சான்றுகள்:

· www.fao.org

· www.agroecologyfund.org

· www.organicwithoutboundaries.bio

· www.environment-ecology.com

· www.slideshare.net

9 views0 comments

Recent Posts

See All

வேளாண் சூழலியல் மற்றும் அதன் சவால்கள் கீழ்நீரால் மீன்வழங் குந்து மீநீரான் கண்ணன்ன மலர்பூக் குந்து கழிசுற்றிய விளை கழனி – புறநானூறு 396. அதாவது நெல் வயலின் அடியில் மீன்கள் இருக்க, நீர்மட்டத்தில் குவளை

வேளாண் சூழலியல் மற்றும் அதன் சவால்கள் "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் சுழன்றும் ஏர்பின்னது உலகம்" -திருவள்ளுவர் வேளாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அய்யன் வள்ளுவர் சொன்ன கூற்று, வேளாண்மையின் இன்றியமைய

சுதந்திரத்திற்கு பிறகு வேளாண் துறையை மேம்படுத்திய ஐந்து திட்டங்கள் முன்னுரை வேளாண்மை தொடர்புடைய ஆராய்ச்சி மற்றும் கல்விக்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் 1905 ஆம் ஆண்டு புது தில்லியில் தொடங்கப்பட்ட