Sneha Udayakumar, Kumaraguru Institute of Agriculture, Erode

வேளாண் சூழலியல் மற்றும் அதன் சவால்கள்

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் சுழன்றும் ஏர்பின்னது உலகம்"

-திருவள்ளுவர்

வேளாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அய்யன் வள்ளுவர் சொன்ன கூற்று, வேளாண்மையின் இன்றியமையாமையை எடுத்துரைக்கிறது. வேளாண் சூழலியல் என்பது வேளாண்மையும் அதன் சார்ந்த நிகழ்வுகளையும் உள்ளடக்கியது ஆகும். வேளாண் சூழலியலை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்:பண்டைய வேளாண்மை, தற்கால வேளாண்மை.

பண்டைய வேளாண்மையில் இயற்கை சூழலியலை முழுவதும் சார்ந்து இருந்தது. ஆடு மாடு அதன் கழிவுகள் விளைநிலங்களுக்கு உரங்களாக பயன்படுத்தப்பட்டது. மொத்தத்தில் பண்டைய வேளாண்மை இயற்கையை மட்டும் சார்ந்து இருந்தது என்று கூற்று மிகையல்ல. இங்கு மக்கள் தொகை பெருக்கம் என்பது நேரடியாகவும் மறைமுகமாகவும் விளைச்சலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நாம் அறிந்தது. இதில் விளைச்சல் குறைவு, ஏனெனில் மக்கள் தொகையும் குறைவு, ஆரோக்கியமும் அதிகம்; சுற்றுச்சூழலியலுக்கு உகந்த வேளாண்மை என்பது பண்டைய வேளாண்மை.

தற்கால வேளாண்மை: இயற்கை சார்ந்த வேளாண்மை இயந்திரங்களைச் சார்ந்து மாறியதுதான் தற்கால வேளாண்மை சூழலியல். இதில் இயந்திரங்களின் பங்களிப்பு அதிகம். இங்கு தேவையின் அடிப்படையில் அதிக விளைச்சலின் பொருட்டு வீரியமிக்க விதைகள், செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள்,அதிக விளைச்சல் இதற்குக் காரணம் மக்கள் பெருவெடிப்பு. "ஒவ்வொரு நிகழ்வும், அந்தந்த நேரத்தில் நியாயங்கள்" என்ற ஜெயகாந்தனின் வார்த்தைகள் இந்த இரண்டு வேளாண் சூழலியலுக்கும் பொருத்தமானதே ஆகும் என்பது மிகவும் சரியானது.

வேளாண் சவால்கள்

நிலம்: விளை நிலங்கள் எல்லாம் இன்று விலை நிலங்களாக ஆகிவிட்டது. ஒவ்வொரு விவசாயியும் வேளாண்மையில் உள்ள இடர்பாடுகள், சவால்கள் இவற்றின் காரணமாக வேளாண்மையை கைவிட்டு வேறு தொழிலுக்கு சென்று விடுகிறார்கள் இன்று மனித மனங்கள் சுருங்கியது போல சாகுபடி பரப்பளவு வருடாவருடம் குறைகிறது, உறவுகளின் தேவையோ வருடாவருடம் அதிகரிக்கிறது. எள் நட்டேன், நெல் நட்டேன் விலையில்லை; கல் நட்டேன் விலைக் கிடைத்தது", என்ற நிலைப்பாடுதான் இன்றைய விவசாயிகளின் நிலையாக இருக்கிறது. இதற்கு காரணம் விளைச்சலுக்கு ஏற்ற விலையினை விவசாயிகளே தீர்மானிக்கும் நிலை வரவேண்டும்.

நீர்:"நீரின்றி அமையாது உலகு"- திருவள்ளுவர்

நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வரிகள். நீரும் சேரும் வேளாண்மையின் அடிப்படைக் கூறுகள் இதை உணர்ந்ததால் தான் நீரினுடைய முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றார். நஞ்சை புஞ்சை நிலம் எதுவானாலும் நீரே ஆதாரம். போதுமான நீர் இல்லாம, வரட்சி. நிலை இருக்கும்போது வேளாண்மையில் எது புரட்சி?. பெரு வெள்ளத்தின் பொழுது நீர் வேளாண்மை தோல்வி. நீரை தேக்கி வைத்திடாமல் விளைநிலங்கள் வீணாகின்றன. அப்பொழுது நீர் என்பது இருந்தும் இல்லாமலும் பெரிய சவாலாகவே இருக்கின்றது. நோய்க்காரணிகள் மழையின் பொழுது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரவும் காரணிகளாக ஆகிவிட்டது.

பருவகால மாற்றம்: வேளாண்மையில் பட்டம் தவறினால் நட்டம். பருவகாலம் மாறுபாட்டினால் அறுவடைக்கு தயாரான பயிர்கள் அழுகலை சந்திக்கிறது. பருவம் தவறியதால் பயிர்களும் வறுமை, அதனால் விளைச்சலின்மை தவிர்க்க முடியாதது ஆகிறது.

நோய்: இவை அனைத்தையும் தாண்டி, நோய் என்பது வேளாண்மையில் பெரும் சவாலாகவே அமைகிறது. நோய் தீர்க்கும் பொருட்டு நாம் மேற்கொள்ளும் பூச்சிக்கொல்லி தெளித்தல் நோயை கட்டுப்படுத்தி எப்போதும் சுற்றுச்சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதைத் தொடர்ந்து வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவது என்பது பெரிய சவால்தான். விவசாயிகளின் பொருளுக்கு அவர்களே விலை நிர்ணயிக்கும் நிலை வர வேண்டும் அப்பொழுதுதான் விவசாயிகளின் நிலை உயரும். அரசாங்கம் அதிக அளவிலான சந்தைப்படுத்தும் திட்டம் கொண்டு வருகிறது, ஆனால் அவற்றில் சிலவற்றையே விவசாயிகளுக்கு தெரிகிறது பல திட்டங்கள் தெரியவில்லை, அவற்றை வேளாண் அலுவலர்களால் தெரிதல் வேண்டும். வேளாண் பேராசிரியர்களான நோயியல், பூச்சியியல் பேராசிரியர்களின் ஆலோசனைக்கேற்ப பயிர்களுக்கு அளவான உரங்களும், உயிர்உரங்களும் பயன்படுத்தல் வேண்டும். மண் வளத்தை காக்க இயற்கை வேளாண்மை, துல்லிய பண்ணைத் திட்டம் ஒருங்கிணைந்த பண்ணை திட்டம் போன்ற திட்டங்களை விவசாயிகள் பின்பற்ற வேண்டும். "எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்",என்ற புறநானூறு வரிகளை நிலைநாட்டிட சவால்களை எல்லாம் சமாளித்து சாதனைகளாக மாற்றுவோம் என்று சபதம் ஏற்போம்.

9 views0 comments

Recent Posts

See All

Suresh R, TNAU, Coimbatore

வேளாண் சூழலியல் மற்றும் அதன் சவால்கள் கீழ்நீரால் மீன்வழங் குந்து மீநீரான் கண்ணன்ன மலர்பூக் குந்து கழிசுற்றிய விளை கழனி – புறநானூறு 396. அதாவது நெல் வயலின் அடியில் மீன்கள் இருக்க, நீர்மட்டத்தில் குவளை

Srishakthi M, TNAU, Coimbatore

வேளாண் சூழலியல் மற்றும் அதன் சவால்கள் “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, உழவே இந்த உலகிற்கு உணவினைப் பகிர்ந்து அளிக்கிறது. வேளாண் சூழலிய

Muthu R, TNAU, Coimbatore

சுதந்திரத்திற்கு பிறகு வேளாண் துறையை மேம்படுத்திய ஐந்து திட்டங்கள் முன்னுரை வேளாண்மை தொடர்புடைய ஆராய்ச்சி மற்றும் கல்விக்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் 1905 ஆம் ஆண்டு புது தில்லியில் தொடங்கப்பட்ட