Akila S, RVS Agriculture College, Thanjavur

சுதந்திரத்திற்குப் பிறகு வேளாண் துறையை மேம்படுத்திய ஐந்து திட்டங்கள்

பொருளடக்கம்

v பிரதான் மந்திரி சம்மான் நிதி யோஜனா

v தேசிய வேளாண் சந்தை (E-NAM)

v விவசாய ஏற்றுமதி மேம்பாட்டு திட்ட திட்டம்

v கால்நடை காப்பீட்டு திட்டம்

v பரம்பராகக் கிரிஷி விகாஸ் யோஜனா

முன்னுரை

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் பஞ்சம் நிலவியது. அப்போது பிரதமர் இந்திரா காந்தி அவர்கள், அவர்களது ஆட்சி காலத்தில் விவசாயத்தில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்த இவர்கள். அதன் பின் விவசாயத்தை மேம்படுத்துவதற்காகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. அவற்றில் ஐந்து திட்டங்கள்,

பொருளுரை:

1. பிரதான் மந்திரி சம்மான் நிதி யோஜனா (PM kisan Samman Nidhi Yojana)

இத்திட்டம் 1.12.2018 ல் நடைமுறைபடுத்தப்பட்டது. இதற்க்காக ₹16,146 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் , வருடத்திற்கு ₹6000ஐ மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. இத்திட்டம் 8 கோடி விவசாயிகளுக்கு பயனளிக்கிறது.

கிசான் கடன் அட்டை : இத்திட்டம் ஆகஸ்ட் மாதம் 1998ல் ஆர்.வி.குப்தாவின் பரிந்துரயின் பேரில், இந்திய வங்கிகளால், விவசாயிகளின் தேவைகளுக்கு ஏற்ப குறுகிய மற்றும் நீண்ட கால கடன்களை வழங்குகிறது. 3 லட்சம் 5 வருடத்திற்கு கடன் உதவியாக தரப்படுகிறது.

2.தேசிய வேளாண் சந்தை (E-NAM : National Agriculture Marketing)

இத்திட்டம் ஏப்ரல் 14 /2016 ல் அறிமுகப்படுத்தபட்டது. எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிகண்டுள்ளது. 90 வகையான வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகிறது. இன்று, 585 சந்தைகள் இணைந்துள்ளது. 16 மாநிலங்களில், 1.66 கோடி விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள். 1.28 லட்சம் வர்த்தகர்கள் மற்றும் 70,934 கமிசன் ஏஜன்ட் பயனடைந்துள்ளனர்.

3.விவசாய ஏற்றுமதி மேம்பாட்டு திட்ட திட்டம் (APEDA)

இத்திட்டம் டிசம்பர் 1985 ல் நிறுவனம் பட்டாலும் 13.02.1986 ல் தீவிரபடுத்தப்பட்டு, 186 சோதனை ஆய்வுகூடங்கள் அமைக்கப்பட்டது. இத்திட்டத்தை, வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம் அறிமுகப்படுத்தப்பட்டது. 26 மாநிலங்கள் , 3 யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் அதிக வருவாய் ஈட்டபடுகிறது.

4. கால்நடை காப்பீடு திட்டம் (Livestock Insurance Scheme)

இதன் கீழ் இந்திய அரசு 75% காப்பீடு தொகை விபத்தில் இறந்த கால்நடைகளுக்கு வழங்குகிறது. இதற்கு, கால்நடை பராமரிக்கும் விவசாயிகள் 3 வருடத்திற்கு முன் தொகையாக 25% செலுத்த வேண்டும்( கால்நடைகளுக்கு ஏற்ப). காப்பீட்டு தொகையாக மாட்டிற்கு ₹ 40,000 , எருமைக்கு ₹50,000 என்று இது போன்று தரப்படுகிறது.

5. பரம்பராகக் கிரிசி விகாஸ் யோஜனா (பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டம்)

இத்திட்டம் இயற்கை விவசாயத்தை மேம்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தவும், மண் வளத்தை பாதுகாக்கவும் கொண்டுவரப்பட்டது. 2007ல் அறிமுகப்படுத்தப்பட்டது. விதை, உயிர் உரம், இயந்திரங்கள் மட்டும் அல்லாமல் விதை முதல் அவற்றை ஏற்றுமதி செய்யும் வரை தேவையான அனைத்து பொருட்களையும் அதற்கான சாதனங்களையும் இத்திட்டத்தின் மூலம் பெற்றுகொள்ளலாம். இத்திட்டம், 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ₹50,000/ஹெக்டர் /3வருடம் நடைமுறைபடுத்தப்பட்டது.

முடிவுரை:

விவசாயத்திற்காக பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும், அவற்றில் பல மக்களுக்கு தெரியவில்லை என்பதே உண்மை. உதாரணமாக, மேற்கண்ட ஐந்து திட்டங்களில் குறிப்பாக கிசான் கடன் அட்டை பற்றி மக்களில் பலருக்கு தெரியவில்லை. இதற்கு, விவசாயம் சம்மந்தபட்ட அனைத்து ஊடகங்களிலும் ( வங்கிகள், அலுவலகங்கள்) விவசாயத்திற்கான திட்டங்கள் அனைத்தையும் வரிசைபடுத்தி மக்களின் பார்வையில் வைக்க வேண்டும்.

Reference:

From, news (businessinsider.in, Zee business Tamil, News18, krishi Jagran) 2020

7 views0 comments

Recent Posts

See All

Suresh R, TNAU, Coimbatore

வேளாண் சூழலியல் மற்றும் அதன் சவால்கள் கீழ்நீரால் மீன்வழங் குந்து மீநீரான் கண்ணன்ன மலர்பூக் குந்து கழிசுற்றிய விளை கழனி – புறநானூறு 396. அதாவது நெல் வயலின் அடியில் மீன்கள் இருக்க, நீர்மட்டத்தில் குவளை

Sneha Udayakumar, Kumaraguru Institute of Agriculture, Erode

வேளாண் சூழலியல் மற்றும் அதன் சவால்கள் "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் சுழன்றும் ஏர்பின்னது உலகம்" -திருவள்ளுவர் வேளாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அய்யன் வள்ளுவர் சொன்ன கூற்று, வேளாண்மையின் இன்றியமைய