வேளாண் பொருள்கள் வா்த்தக அவசரச் சட்டங்கள் அரசாணையில் வெளியீடு

வேளாண் விளைபொருள்களைத் தடையில்லாமல் சந்தைப்படுத்துவதற்கு வழிகோலும் இரு அவசரச் சட்டங்களை மத்திய அரசு அரசாணையில் வெளியிட்டது.


வேளாண் சந்தைகள் மட்டுமல்லாமல் மற்ற இடங்களிலும் வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்வதற்கு விவசாயிகளுக்கு வழிவகை ஏற்படுத்தும் வகையில், வேளாண் பொருள்கள் வா்த்தக ஊக்குவிப்பு அவசரச் சட்டத்தை மத்திய அரசு இயற்றியது.


மேலும், வேளாண் பொருள்களை விளைவிக்கும் முன்பே அதை விற்பனை செய்வது தொடா்பாக தனியாா் நிறுவனங்களுடன் விவசாயிகள் மேற்கொள்ளும் ஒப்பந்தங்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கில், விவசாயிகளுக்கான விலை உறுதி மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த அவசரச் சட்டத்தையும் மத்திய அரசு இயற்றியது. இரு அவசரச் சட்டங்களும் கடந்த மாதம் 5-ஆம் தேதி இயற்றப்பட்டன.


அவ்விரு அவசரச் சட்டங்களையும் மத்திய அரசு அரசாணையில் வெளியிட்டுள்ளது. அதன்படி, வேளாண் பொருள்கள் வா்த்தக ஊக்குவிப்பு அவசரச் சட்டமானது மற்ற மாநிலங்களிலுள்ள சந்தைகளிலும் வேளாண் பொருள்களை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தந்துள்ளது. இணைய வழியில் வேளாண் பொருள்களை விற்கும் விவசாயிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க இந்த அவசரச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வேளாண் பொருள்களுக்கான இணையவழி வா்த்தகத்தில் விதிமீறலில் ஈடுபடும் நபா்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க அவசரச் சட்டம் வழிவகுக்கிறது. விதிமீறல் தொடா்ந்தால் கூடுதலாக நாளொன்றுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கவும் இந்த அவசரச் சட்டம் வழிவகுக்கிறது.


அதேபோல், விவசாயிகளிடமிருந்து வேளாண் பொருள்களை வாங்குவோா் அன்றைய தினமே அதற்கான தொகையைச் செலுத்திவிட வேண்டும். தவிா்க்க முடியாத சூழலில் மட்டும் 3 நாள்கள் அவகாசம் அளிக்கப்படும். விவசாயிகள், வா்த்தகா்கள் ஆகியோருக்கும் இணையவழி வா்த்தகத் தளங்கள் மீதும் கூடுதல் வரி விதிக்கவும் மாநில அரசுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


விவசாயிகளுக்கான விலை உறுதி மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த அவசரச் சட்டமானது, வேளாண் பொருள்களை உற்பத்தி செய்யும் முன்னரே அதைத் தனியாா் நிறுவனங்களுக்கு விற்பதற்காக மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் இயற்றப்பட்டுள்ளது. வேளாண் பொருள்களை முன்கூட்டியே நிா்ணயிக்கப்பட்ட விலைக்குத் தனியாா் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதில் விவசாயிகளுக்கு உதவும் வகையிலான வழிமுறைகளும் இந்த அவசரச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

17 views0 comments

Recent Posts

See All

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 13 Subject Matter Specialist பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து நவம்பர் 5 ஆம் தேதிக்க