வேளாண் புத்தாக்க திட்டம்

பட்ஜெட்டில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை குறித்து இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்-கடந்தாண்டு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பிற்கு பயிர் காப்பீடாக 7 கோடி ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பரிட்சார்த்த அடிப்படையில் செயல்படுத்திய சாகுபடி நேரடி மானியத்திட்டம் உள்ளிட்ட விவசாயிகளின் நலன் சார்ந்த திட்டங்களை தற்போது விரிவுப்படுத்தி வேளாண் புத்தாக்க திட்டம் என்ற புதிய திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும்.சொர்ணாவாரி மற்றும் சம்பா பருவ நெற்பயிருக்கு ஏக்கருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம்,10 ஆயிரம் ரூபாய் மானியமாக தொடர்ந்து வழங்கப்படும். சொர்ணாவாரி பருவத்திற்கு பதிலாக நவரை பருவத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய் உற்பத்தி செலவின மானியமாக வழங்கப்படும். இதற்கு மொத்தமாக 24 கோடி செலவிடப்படும்.கரும்பு மற்றும் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் தொடர்ந்து மானியமாக வழங்கப்படும். இதற்கு மொத்தமாக ரூ. 10 கோடி செலவிடப்படும்.காய்கறி, வாழை மற்றும் இதர பழங்கள், தோட்டப்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மத்திய அரசு திட்டத்தில் வழங்கப்படும் சாகுபடிக்கு பிந்தைய பொருளீட்டு மானியத்துடன் கூடுதலாக 5 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்த மானியத் தொகை ஏக்கருக்கு 10 ஆயிரம் மிகாமல் வழங்கப்படும். மணிலா, சாகுபடிக்கு அளிக்கப்படும் மானியம் ஏக்கருக்கு 2 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். எள் சாகுபடிக்கு அளிக்கப்படும் மானியம் ஏக்கருக்கு 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.சிறுதானிய பயிர் உற்பத்தியை அதிகரிக்கவும் ஊக்குவிக்கவும் மில்லட் மிஷன் திட்டம் தொடங்கப்படும். மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகள் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை கடைபிடித்திட ஏதுவாக ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.வேளாண் பயிர்காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் செலுத்தவேண்டிய தவணை தொகையை அரசே செலுத்தவும், மானிய தொகை வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும். விவசாய நிலங்களில் பரவலாக வளர்ந்துள்ள காட்டு கருவேல மரங்களை அகற்றி மீண்டும் விவசாய பயன்பாட்டிற்கு கொண்டு வர விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.நிலங்களுக்கு பாய்ச்சும் நீர் வீணாவதை தடுக்க ஒவ்வொரு ஆழ்குழாய் கிணற்றுக்கும் பாசன நிலங்களுக்கு நிலத்தடி குழாய் இணைப்பு திட்டம் முதற்கட்டமாக காரைக்காலில் செயல்படுத்தப்படும்.புதுச்சேரி மக்களின் காய்கறி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள நகர பகுதிகளில் வீட்டின் புறப்பகுதி, மாடிகளில் தொகுதி ரீதியாகவும், காய்கறிகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்ள புதிய திட்டம் இந்த நிதியாண்டில் துவங்கப்படும்.சிறு தானிய வகைகள், காய்கறி, கனி வகைகள் பதப்படுத்தல், மதிப்பு கூட்டுதல் ஆகியவற்றுக்கான தொழில்நுட்ப கருவிகள், உபகரணங்கள் அடங்கிய தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் இந்தாண்டு ஏற்படுத்தப்படும். நடப்பாண்டு வேளாண் துறைக்கு 119.37 கோடி ஒதுக்க உத்தேசிக்கப்பட்டுஉள்ளது.

5 views0 comments

Recent Posts

See All

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 13 Subject Matter Specialist பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து நவம்பர் 5 ஆம் தேதிக்க