வேளாண் சார்ந்த படிப்புகளில் சேர விரும்புவர்களின் கவனத்திற்கு!


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 14 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் பத்து (10) இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான 2020-2021 ஆம் வருடத்திற்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் மாதம் (2020) முதல் வாரத்தில் தொடங்கப்படும் என்று முனைவர் மா. கல்யாணசுந்தரம், முதன்மையர் (வேளாண்மை) மற்றும் தலைவர் (மாணவர் சேர்க்கை) தெரிவித்தார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் நீ. குமார் இணையதள மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வினை ஆகஸ்ட் மாதம் (2020) முதல் வாரத்தில் தொடங்கி வைப்பார்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பம் தேவையான விபரங்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணத்தை www.tnauonline.in என்ற இணையதளம் வாயிலாக ஆகஸ்ட் மாதம் (2020) முதல் வாரத்தில் பதிவேற்றம் செய்யலாம்.

மாணவர் சேர்க்கை குறித்த இதர விபரங்களை அறிந்து கொள்ள www.tnau.ac.in இணைய தளத்தில் உள்ள தகவல் கையேடு உதவிகரமாக இருக்கும்.

மேலும் தெளிவு பெற 0422-6611322, 0422-6611328, 0422-6611345, 0422-

6611346 ஆகிய தொலைபேசி உதவிச் சேவை எண்களை அனைத்து வேலை நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

45 views0 comments

Recent Posts

See All

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 13 Subject Matter Specialist பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து நவம்பர் 5 ஆம் தேதிக்க