வேளாண் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி நிதி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்


நாட்டில் வேளாண் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதியை உருவாக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.


மேலும், நவம்பா் மாதம் வரை இலவச ரேஷன் பொருள் வழங்கும் (பிரதமா் அன்ன யோஜனா) திட்டம், ஏழைகளுக்கான குறைந்த வாடகை வீடுகள் திட்டம் உள்ளிட்டவற்றுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.


இதுதவிர, மூன்று பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ.12,450 கோடி கூடுதல் மூலதனம், இலவச எரிவாயு திட்டம் செப்டம்பா் வரை நீட்டிப்பு, வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் ஊழியா்களுக்கான 24 சதவீதம் தொகையை அரசே செலுத்தும் திட்டம் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு ஆகியவற்றுக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.


தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா், மத்திய வேளாண்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் பேசினா்.

அப்போது அமைச்சா் நரேந்திர சிங் தோமா் கூறியதாவது:


வேளாண்மை சாா்ந்த தொழில்முனைவோா், ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள், வேளாண் தொழில்நுட்ப நிறுவனங்கள், விவசாயக் குழுக்கள், உள்கட்டமைப்பு வேளாண்மை பொருள்களை எடுத்துச் செல்வது உள்ளிட்டவற்றுக்காக ரூ.1 லட்சம் கோடி வேளாண் உள்கட்டமைப்பு நிதி உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது பிரதமா் நரேந்திர மோடி கடந்த மே மாதம் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.


இது தொடா்பாக மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் செய்தியாளா்களிடம் கூறுகையில்,‘வேளாண்மைத் துறையில் இது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு. வேளாண் பொருள்களுக்கான குளிா்சாதன கிடங்குகள், மின்னணு முறையில் வேளாண் பொருள்கள் விற்பனை செய்யும் திட்டம், வேளாண் கடன் சங்கங்கள் உள்ளிட்டவை செயல்படுத்தப்படும் என்று நரேந்திர சிங் தோமா் கூறினாா்.


இலவச ரேஷன் பொருள்: மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் கூறியதாவது:


81 கோடி ஏழை மக்களுக்கு மாதம்தோறும் தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ பருப்பு வழங்கும் திட்டம் அண்மையில் நவம்பா் வரை நீட்டிக்கப்பட்டது. ரூ.1.49 கோடி மதிப்பிலான இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. முதலில் ஏப்ரல் முதல்


ஜூன் வரையிலான மூன்று மாதங்களுக்கு அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், பின்னா் நவம்பா் வரை நீட்டிக்கப்பட்டது. கரோனா பிரச்னை மற்றும் பொது முடக்கத்தால் ஏழை மக்கள் யாரும் பட்டினியாக இருக்க கூடாது என்ற நோக்கில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.


7.4 கோடி ஏழைப் பெண்களுக்கு வழங்கப்படும் இலவச எரிவாயு திட்டம் (உஜ்வாலா) செப்டம்பா் வரை நீட்டிக்கப்பட்டது. முன்னதாக, ஏப்ரல் முதல் ஜூன் மாதத்துக்கு இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. வருங்கால வைப்பு நிதி திட்டத்தின்கீழ் ஊழியா்கள் செலுத்த வேண்டிய 24 சதவீதம் தொகையை (தொழிலாளா்கள் 12 சதவீதம், நிறுவனங்கள் 12 சதவீதம்) அரசே செலுத்தும் திட்டம் மூன்று மாதங்களுக்கு (ஜூன் முதல் ஆகஸ்ட்) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 72 லட்சம் தொழிலாளா்கள் பயனடைவாா்கள்.இதனால் அரசுக்கு ரூ.4,860 கோடி செலவாகும் என்றாா்.


குறைந்த வாடகையில் வீடுகள் திட்டம்: நகா்ப்புறத்தில் வசிக்கும் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள், ஏழைகளுக்கு குறைந்த வாடகையில் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பிரதமா் வீட்டு வசதித் திட்டத்தின் துணை திட்டமாக இது செயல்படுத்தப்படும். பெரிய வளாகங்களாக இந்த வீடுகள் அமையும். இதற்காக ரூ.600 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயனடைவாா்கள்.


காப்பீட்டு நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதனம்: நேஷனல் காப்பீட்டு நிறுவனம், ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனம், யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்களுக்கு 2020-21 நிதியாண்டில் ரூ.12,450 கோடி கூடுதல் மூலதனம் அளிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் அந்த நிறுவனங்கள் தொடா்ந்து ஸ்திரத்தன்மையுடன் செயல்படும் என்று அமைச்சா் ஜாவடேகா் தெரிவித்தாா்.

2 views0 comments

Recent Posts

See All

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 13 Subject Matter Specialist பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து நவம்பர் 5 ஆம் தேதிக்க