
வேளாண் உற்பத்தியாளர்களுக்காக, 1,00,000 கோடி நிதியுதவி திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.!
இந்த நிதியுதவியானது, பிரதமரின் கிஷான் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அறுவடை செய்த பின்னர் சேகரித்த வேளாண் பொருட்களை சேகரித்து வைக்க குளிர்சாதன கிடங்கு, சேமிப்பு கிடங்கு ஆகியவை அமைக்க இதன் மூலம் விவசாயிகள் கடன் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக மத்திய அரசு, 12 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுடனும், 11 வேளாண் வங்கிகளுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இத்திட்டம் மூலம் விவசாயிகள் 3 சதவீத வட்டி விகிதத்தின் கீழ் அதிகபட்சமாக 2 கோடி வரையில் கடன் பெற்றுக்கொள்ளலாம். நடப்பு ஆண்டில் 10 ஆயிரம் கோடி நிதியுதவியும், அடுத்த 3 ஆண்டுகளில் தலா 30 ஆயிரம் கோடி நிதியுதவியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்குகளில் மட்டுமே இந்த கடன் தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
