மாவட்ட வாரியாக பயிர் காப்பீடு.

சென்னை : 'மாவட்ட வாரியாக, எந்தெந்த பயிர்களுக்கு, வரும், ஜூலை 31ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும்' என, வேளாண் துறை அறிவித்துள்ளது.


பயிர் காப்பீடு திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை, மத்திய அரசு செய்துள்ளது. அதன்படி, கீழ்கண்ட மாவட்டங்களில், கீழ்கண்ட பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், வரும்,ஜூலை 31க்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.

நெல் ரகங்கள்: திருவாரூர், சேலம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திண்டுக்கல், அரியலுார், காஞ்சிபுரம், துாத்துக்குடி, தஞ்சாவூர், தேனி, திருவண்ணாமலை, வேலுார், தர்மபுரி, புதுக்கோட்டை, விழுப்புரம், நாமக்கல், பெரம்பலுார், திருநெல்வேலி, கடலுார், திருவள்ளூர், கோவை.

மக்காச்சோளம் :சேலம், திண்டுக்கல், அரியலுார், தேனி, திருவண்ணாமலை, தர்மபுரி, புதுக்கோட்டை, விழுப்புரம்.

துவரம் பருப்பு :அரியலுார், தேனி, தர்மபுரி, புதுக்கோட்டை.

உளுந்தம் பருப்பு : சேலம், கன்னியாகுமரி, அரியலுார், துாத்துக்குடி, தேனி, தர்மபுரி, புதுக்கோட்டை, நாமக்கல், சிவகங்கை, திருநெல்வேலி, திருவள்ளூர், கோவை.

பச்சை பருப்பு:சேலம், தர்மபுரி, நாமக்கல், திருவள்ளூர், கோவை. நிலக்கடலை:சேலம், அரியலுார், காஞ்சிபுரம், துாத்துக்குடி, தஞ்சாவூர், தேனி.

சோளம்: அரியலுார், தேனி, திருவண்ணாமலை, தர்மபுரி, திருநெல்வேலி. கம்பு : அரியலுார், தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலுார், திருவள்ளூர் எள் : அரியலுார், தேனி, திருவண்ணாமலை, தர்மபுரி, புதுக்கோட்டை, பெரம்பலுார், திருவள்ளூர், கோவை. பருத்தி : - சேலம், துாத்துக்குடி; கேழ்வரகு - தர்மபுரி;

தட்டை பருப்பு - சேலம்; சூரியகாந்தி - தேனி;

சாமை - திருவண்ணாமலை, தர்மபுரி;

கொள்ளு - கோவை.

காப்பீடு செய்யும் இறுதி நாள் வரைக்கும் காத்திருக்காமல், முன்கூட்டியே பதிவு செய்து, காப்பீடு திட்ட பலன்களை முழுமையாக பெற வேண்டும்.

22 views0 comments

Recent Posts

See All

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 13 Subject Matter Specialist பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து நவம்பர் 5 ஆம் தேதிக்க