
மார்க்கெட் கமிட்டியில் பருத்தி ஏலம் அதிக விலை கிடைத்ததால் மகிழ்ச்சி

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் மார்க்கெட் கமிட்டியில் 30 ஆண்டுகளுக்கு பின், முதல் முறையாக நேற்று நடந்த பருத்தி மறைமுக ஏலத்தில், அதிகபட்ச விலையாக ரூ.5450க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஏலத்தில் 550 குவிண்டால் பருத்தி ஏலத்திற்கு வைக்கப்பட்டிருந்தன. பருத்தி விலை அதிகபட்சமாக ரூ.5,450, குறைந்தபட்ச விலையாக ரூ.3,436 என கொள்முதல் செய்தனர். நேற்றைய சராசரி கொள்முதல் விலை ரூ.4,800 ஆக இருந்தது.டெல்டா பகுதியில் ரூ. 3,600 த்திற்கு பருத்தி கொள்முதல் செய்த நிலையில் தற்போது மார்க்கெட் கமிட்டி மூலம் அதிக விலைக்கு கொள்முதல் செய்ததால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். விற்பனைக்கு அதிகளவு பருத்தியும் வருவதால் அதிகாரிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.