
மறையக் கூடிய மீன் – கண்களுக்கு தெரியாது அப்படியான ஒரு அதிசயமான மீன் உருவாகியுள்ளது.
சூரிய ஒளி அல்லது செயற்கை ஒளி ஒரு பொருளில் பட்டு தெறிப்படைந்து, அது எமது கண்களுக்கு வருவதனால் தான் நாம் அதனை பார்க்க முடிகிறது. ஆனால் ஒளி படும் வேளை, அந்த ஒளியை உள்வாங்கிக் கொள்ளக் கூடிய தோல் எம்மிடம் இருந்தால். 80% சத விகிதம் எம்மை மற்றவர்கள் பார்க்க முடியாத நிலை தோன்றும். ஆழ் கடலில் வசிக்கும் ஆங்கிளர் மீன் என்னும் ஒரு வகை மீன்கள், தற்போது பரிணாம வளர்ச்சியடைந்து. தமது தோலை

98% சதவிகித கறுப்பு தோலாக மாற்றி உள்ளது.
மேலும் இந்த தோல் ஒளியை தெறிக்க விடாமல் உள்வாங்கிக் கொள்ளும். இதனால் அம் மீன்கள் 90 சதவிகிதம் எதிரியின் பார்வையில் இருந்து தப்பி விடுகிறது. இது போக இவற்றின் தலையில் ஒளிரக்கூடிய சிறிய விளக்குகள் உள்ளது என்பது அதனை மிஞ்சிய ஆச்சரியம். மீனுக்கு தேவைப்படும் நேரத்தில் அவை ஒளிரவல்லவை. எனவே எதிரியை கண்டால் தன்னை அப்படியே இருட்டடிப்பு செய்து விடும் இந்த மீன்.
தனக்கு தேவையான நேரம் ஒளியை பாவித்து தனது இரையை தேடிப் பிடிக்கிறது. இதுவே உலகில் தற்போது மிக மிக அதிசயமான மீன் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள்.