மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்: பயிர் பாதுகாப்பு முறையை பின்பற்ற அறிவுரை


மக்காச்சோளத்தில், படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த, பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்' என, நாமக்கல் கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில், 3.40 லட்சம் ஹெக்டேரில், மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறைந்த நாளில், அதிக லாபம் தரும் என்பதால், விவசாயிகள், இப்பயிரை விரும்பி சாகுபடி செய்து வருகின்றனர். நடப்பு ஆண்டில், காரிப் பருவத்தில், 1.52 லட்சம் ஹெக்டேரில், மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த, இரண்டு ஆண்டுகளாக, மக்காச்சோள விவசாயிகளுக்கு, அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. வேளாண் துறை பல்வேறு பயிர்ப்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும், 2018ம் ஆண்டு, 2.2 லட்சம் ஹெக்டேரில் படைப்புழு தாக்கியது. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில், தமிழக முதல்வர், மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், விதியைத் தளர்த்தி, 186 கோடியே, 25 லட்சம் ரூபாய் இடுபொருள் நிவாரணமாக வழங்கி உத்தரவிட்டார். அதன் மூலம், 2018-19ல், மக்காச்சோளம் பயிரிட்டு பாதிப்படைந்த, இரண்டு லட்சத்து, 93 ஆயிரத்து, 424 விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்பட்டது. அதை தொடர்ந்து, 2019ல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பயிர் சாகுபடி பருவம் துவங்கும் முன்பே, வேளாண் துறை நடவடிக்கைகள் மேற்கொண்டது. அதன் காரணமாக, 2019-20ல், மக்காச்சோளப் பயிரில், படைப்புழுவின் தாக்குதல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. 2020-21 ஆம் ஆண்டில் படைப்புழுவின் தாக்குதலிலிருந்து விவசாயிகளை முழுமையாக பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு அரசு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலை ஆராய்ச்சிப் பணிகளை வலுப்படுத்தும் வகையில், ஐந்து கோடி ரூபாய் நிதியை விடுவித்து, ஆராய்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நடப்பாண்டில், காரிப் பருவத்தில், தற்போது, மக்காச்சோள விதைப்பு நடந்து வருகிறது. படைப்புழு தாக்குதலை வெற்றிகரமாக நிர்வகிக்கும் வகையில், ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன்படி, கோடை உழவு செய்தல், கடைசி உழவில், ஹெக்டேருக்கு, 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுதல், பரிந்துரைக்கப்பட்ட ரசாயன மருந்தை கொண்டு விதை நேர்த்தி செய்தல். ஒரே சமயத்தில் அனைத்து விவசாயிகளும் விதைத்தல். ஹெக்டேருக்கு, சூரிய விளக்குப்பொறி ஒன்றும், 12 இனக்கவர்ச்சிப் பொறிகளும் வைத்து, பூச்சி நடமாட்டத்தை கண்காணித்தல். தொடர்ந்து மக்காச்சோளம் சாகுபடி செய்வதை தவிர்த்தல். மக்காச்சோள விவசாயிகள் அனைவரும், மேற்கண்ட பயிர்பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றி, படைப்புழு தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்தி, நல்ல விளைச்சல் பெற வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

3 views0 comments

Recent Posts

See All

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 13 Subject Matter Specialist பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து நவம்பர் 5 ஆம் தேதிக்க