
பால் பாக்கெட்டுகள் கிருமி நீக்கம் செய்ய வேண்டுமா? FSSAI அறிவுரை

கொரோனா நுண்கிருமி பரவலைத் தடுக்க, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களின் மேற்பரப்பை கிருமி நீக்கம் செய்ய வல்லுநர்கள் மீண்டும் மீண்டும் பரிந்துரைக்கின்றனர்.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பால் பாக்கெட்களை எவ்வாறு சுத்தம் செய்வது என்பது குறித்த சில வழிகாட்டுதல்களைக் கொண்டு வந்துள்ளது. பரிந்துரைகளை இங்கே காணலாம்:
*பால் பாக்கெட்டுகளை சமூக இடைவெளி கடைபிடித்து வாங்கவும். விற்பனையாளர் முகக் கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
*பால் பாக்கெட்டுகளை நீரில் நன்றாக கழுவ வேண்டும்.
*பாத்திரத்தில் மாற்றுவதற்கு முன்பு கைகளைக் கழுவ வேண்டும்.
*பால் பாக்கெட்டுகள் உலர்ந்த பின் கத்தரிக்கவும்.
*பாலை நன்றாக சூடு படுத்தவும்.