புற்றுநோய் அணுக்களை அழிக்கும் மஞ்சள்: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு.

புற்று நோய் சிகிச்சையின்முக்கிய கட்டமாக உடலில் உள்ளஆரோக்கியமான உயிரணுக்களுக்கு சேதம் ஏற்படாமல், நோய்அணுக்கள் அழிக்கப்பட வேண்டும். ஆனால், தற்போதையசிகிச்சை முறையில் இது முழுமையாக செயல்படுத்த முடியவில்லை.

இந்நிலையில், மஞ்சளில் உள்ள நச்சுத்தன்மை இல்லாத‘குர்குமின்’, ரத்தம் மற்றும் எலும்புமஜ்ஜைகளில் புற்றுநோயை உண்டாக்கும் ‘லுக்மியா’ அணுக்களை திறம்பட அழிப்பதாக சென்னை ஐஐடி உயிரிதொழில்நுட்பத் துறை பேராசிரியர் ரமா சங்கர் வனர்மா தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.மேலும், இந்த ஆராய்ச்சி முடிவுகள் புகழ் பெற்ற மருந்தியல் அறிக்கைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 views0 comments