பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை பெறுவது எப்படி?- மத்திய விவசாய அமைச்சகம் விளக்கம்

பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 2020 கரீப் பருவத்திற்கு விவசாயிகள் பதிவு முழுவீச்சில் நடப்பதாக மத்திய விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 2020 கரீப் பருவத்திற்கான விவசாயிகள் பதிவு நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அனைத்து விசாயிகளுக்கும் பதிவை மத்திய அரசு இலவசமாக செய்து வருகிறது. பிரிமியத் தொகையை மட்டும் விவசாயிகள் செலுத்த வேண்டும். விவசாயிகள் தங்கள் உணவுப் பயிர்களைக் (தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள்) காப்பீடு செய்து, காப்பீட்டுத் தொகையில் 2 சதவீதம் என்ற மிகக் குறைவான காபீட்டுத்தொகையைச் செலுத்தினால் போதும். எஞ்சிய காபீட்டுத்தொகையை மத்திய, மாநில அரசுகள் மானியமாக வழங்குகின்றன. நடப்பு 2020 கரீப் பருவத்தில் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவுகளைச் செய்வதற்கான அவகாசம் 2020 ஜூலை 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.


விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், காணொலி மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து விவசாயிகளும் பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தங்களைப் பதிவு செய்து கொண்டு, இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பயிர்ச்சேதம், விளைச்சல் இன்மையால் ஏற்படும் நிதி இழப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.


விதைப்புக்கு முன்பிருந்து அறுவடை முடியும் வரையிலான நடவடிக்கைகள் முழுவதற்கும் பயிர் இழப்பு ஏற்பட்டால் பாதுகாப்பை இந்தத் திட்டம் உறுதி செய்கிறது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் விரைந்து பதிவு செய்துகொண்டு, எதிர்பாராத காரணத்தால், விதைப்பு தடைப்பட்டால் அதற்கு இழப்பீட்டைப் பெறமுடியும். மேலும், வறட்சி, வெள்ளம், தண்ணீர் சூழ்தல், திடீர் மழையால் ஏற்படும் மண் சரிவுகள், ஆலங்கட்டி மழை, இயற்கையால் ஏற்படும் தீ விபத்து, புயல் ஆகியவற்றால் ஏற்படும் இழப்பு நடப்பு பயிர்களுக்கும், ஆலங்கட்டி மழை, புயல், திடீர் மழை ஆகியவற்றால் ஏற்படும் இழப்புக்கு அறுவடைக்குப் பிந்தைய பயிர்களுக்கும் ஒருங்கிணைந்த அபாய இழப்பீடு வழங்கப்படுகிறது.


பிரதமர் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பதிவு செய்ய விரும்பும் விவசாயிகள், அருகிலுள்ள வங்கி, தொடக்க வேளாண் கடன் சங்கம், பொதுச்சேவை மையம்/ கிராம அளவிலான தொழில்முனைவோர், வேளாண்துறை அலுவலகம், காப்பீட்டு நிறுவனத்தின் பிரதிநிதியை தொடர்பு கொள்ளலாம். அல்லது www.pmfby.gov.in என்ற தேசிய பயிர்க் காப்பீட்டு வலைதளத்திற்கோ, (https://play.google.com/store/apps/details?id=in.farmguide.farmerapp.central) என்ற பயிர்க் காப்பீட்டு செயலியையோ நேரடியாக ஆன்லைனில் தொடர்பு கொள்ளலாம்.


விவசாயிகள் ஆதார் எண், வங்கி பாஸ் புத்தகம், நில ஆவணம்/ குத்தகை ஒப்பந்தம், சுய பிரகடனச் சான்றிதழ் ஆகியவற்றைப் பதிவு செய்யும் நடைமுறையை நிறைவு செய்ய கொண்டு வர வேண்டியது அவசியம். இந்தப் பருவத்தில் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் அவர்களது விண்ணப்பங்களின் நிலவரம் குறித்து , பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் தெரியப்படுத்தப்படும்.


விவசாயிகளுக்கு தடையற்ற பதிவை உறுதிசெய்யும் வகையில், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பொதுச்சேவை மையங்கள், மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு, கிராம அளவிலான தொழில் முனைவோர், மாநில மற்றும் மாவட்ட அளவிலான வேளாண் மற்றும் ஆத்மா அதிகாரிகள் உள்பட 29,275 அதிகாரிகளுக்கு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் பயிற்சி அளிக்கிறது. இது தவிர, பல்வேறு சம்பந்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு காப்பீட்டு நிறுவனங்களும் பயிற்சி அளித்து வருகின்றன. கிசான் அழைப்பு மையங்களைச் சேர்ந்த 600 நிர்வாகிகளுக்கு பயிற்சி வழங்குவதையும் அமைச்சகம் நோக்கமாக கொண்டுள்ளது.

2 views0 comments

Recent Posts

See All

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 13 Subject Matter Specialist பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து நவம்பர் 5 ஆம் தேதிக்க