
நெல் வயல்களுக்கு வரப்பு செதுக்கி சேறுபூசும் கருவி அறிமுகம்

தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் நெல் பயிரிடும் முன் வரப்பை செதுக்கி மண் அணைக்க ஒரு ஏக்கருக்கு 1500 முதல் 2000 ரூபாய் செலவழித்து வரும் நிலையில் அச்செலவினை குறைக்கவும் விதமாக எளிமையாக நிலத்தினை தயார் படுத்தவும், *தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறையின்* மூலமாக வரப்பை செதுக்கி சேறுபூசும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இக்கருவியை பயன்படுத்தினால் ஏற்கனவே உள்ள முறையற்ற வரப்புகளை நேராக செதுக்கியும், இருக்கும் மண்ணை வரப்புகளின் பக்கவாட்டு பகுதிகளில் சாய்வாக அழுத்தமாகவும் பூசும் வகையிலும், எலி வளைகளை முழுமையாக மூடிவிடும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் முறைப்படுத்தப்பட்ட வரப்புகள் அமைக்கவும் முடியும்.
ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 340 வாடகையாக வசூலிக்கப்படுகிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் வரப்பு செதுக்கி சேறு பூச ஒன்றரை மணி நேரம் செலவாகும். எனவே ஒரு ஏக்கருக்கு ரூபாய் 500 செலவில் முழுமையாக நெல் வயல்களை முறைப்படுத்த முடியும்.
முன்னுரிமை அடிப்படையில் தரப்படும் இச்சலுகையை பயன்படுத்திக் கொள்ள விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறையை அணுகி பதிவு செய்து பயன்பெறலாம்.