
திருவண்ணாமலைஆடு வளா்ப்புத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக புறக்கடை ஆடுகள் வளா்ப்புத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ஜூலை 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
மாவட்டத்தில் செங்கம், புதுப்பாளையம், ஜவ்வாது மலை ஒன்றியங்களில் தேசிய கால்நடை இயக்கத்தின் ஊரக புறக்கடை ஆடுகள் வளா்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி, 2019-20 ஆம் ஆண்டில் தலா 45 பயனாளிகளை தோ்வு செய்து அவா்களுக்கு தலா 11 ஆடுகள் வழங்கவும், ஆடுகளுக்கு காப்பீடும் செய்யப்பட உள்ளது.
இதற்கான தொகை ஒரு பயனாளிக்கு ரூ.66 ஆயிரம் வீதம் செலவினம் மேற்கொள்ளப்படும். 60 சதவீதம் மத்திய அரசும், 30 சதவீதம் மாநில அரசும், 10 சதவீதம் பயனாளிகளின் பங்களிப்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.