திருச்சி மாவட்டத்தில் நிகழாண்டு 12,000 ஏக்கரில் குறுவை சாகுபடி- நடவுப் பணிகளில் விவசாயிகள் மும்முரம்


டெல்டா மாவட்டங்களின் குறுவை நெல் சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப் பட்டதைத் தொடர்ந்து, விவசாயி கள் நாற்றங்கால் அமைத்து நாற்று விட்டிருந்தனர். இந்த நாற்றுகளை பறித்து நடவு செய்யும் பணிகள் கடந்த 10 தினங்களாக நடைபெற்று வருகின்றன.


திருச்சி மாவட்டத்தில் குறுவை சாகுபடி அதிக அளவில் நடை பெறும் லால்குடி வட்டாரம் உள் ளிட்ட டெல்டா பாசன பகுதிகளில், இந்த ஆண்டு 12 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடியை மேற்கொள்ள வேளாண் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில், இதுவரை 5 ஆயிரம் ஏக்கரில் நடவுப் பணிகள் முடிவுற் றுள்ளன. மீதமுள்ள 7 ஆயிரம் ஏக்கருக்கான நாற்றுகள் தயார் நிலையில் உள்ளன. இன்னும் 10 தினங்களுக்குள் நடவுப் பணிகள் நிறைவடையும்.


குறுவை சாகுபடிக்கு குறைந்த வயதுடைய ஆடுதுறை 36, கோ.ஆர்- 51 ஆகிய ரகங்களை விவசாயிகள் அதிக அளவில் நடவு செய்துள்ளனர். வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு 50 டன் அளவுக்கு விதைநெல் வழங்கப்பட்டுள்ளது.


யூரியா, பொட்டாஷ் உள் ளிட்ட உரங்கள் தேவையை விட கூடுத லாகவே இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகிக்கப் பட்டு வருகிறது என வேளாண் துறையினர் தெரிவித்தனர்.


திருச்சி மாவட்டத்தில் அவ்வப் போது பெய்து வரும் மழை யும் சாகுபடி பணிகளுக்கு பேருதவி யாக இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

5 views0 comments