தேனில் கலப்படம்; கண்டறிய குஜராத்தில் உலகத்தரம் வாய்ந்த ஆய்வகம் திறப்பு


குஜராத் ஆனந்தில் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDP) நிறுவிய 'உலகத் தரம் வாய்ந்த கலைத் தேன் பரிசோதனை ஆய்வகத்தை' மத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று தேசிய தேனீ வாரியத்தின் (NBB) ஆதரவுடன் காணொலிக்காட்சி மூலம் மத்திய மீன்வளத்துறை, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், பர்ஷோட்டம் ரூபாலா மற்றும் கைலாஷ் சவுத்ரி, மத்திய வேளாண் மாநில அமைச்சர்கள் டாக்டர். சஞ்சீவ் குமார் பாலியன், மத்திய மாநில அமைச்சர் (FAH & D) மற்றும் வேளாண்மை, ஒத்துழைப்பு, விவசாய நலத்துறை, மீன்வளத் துறை, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் திறந்து வைத்தார்.


இந்த சந்தர்ப்பத்தில், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதில் அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாகவும், தேனீ வளர்ப்பு நிறுவனம் விவசாயிகளின் வருமானத்தை ஈடுசெய்வதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும் மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.


விஞ்ஞான தேனீ வளர்ப்பு மூலம் அதிக மதிப்புள்ள தேன் மற்றும் தேனீ தயாரிப்புகளை உற்பத்தி செய்ய, பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை தோமர் தெரிவித்தார், மேலும் நிலமில்லாத விவசாயிகள், குறைவான தொழிலாளர்களை கொண்டு தேனீக்கள் வளர்ப்பதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தேனீ வளர்ப்பு நிறுவனத்தின் நோக்கம் என்றார்.


வேளாண்மை, ஒத்துழைப்பு மற்றும் உழவர் நலத்துறை தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன் இயக்கத்திற்கு (NBHM) 2 வருட காலத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம், தேசிய தேனீ வாரியம், காதி மற்றும் கிராமத் தொழில்துறைக் கழகம், கொள்கை வகுப்பாளர்கள், விவசாயிகள் மற்றும் தேனீ வளர்ப்பவர்கள் தங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதற்கும், இந்த முயற்சியில் தொடர்ந்து ஆதரவளித்ததற்காகவும் மத்திய வேளாண் அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய மீன்வளத்துறை, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், தேன் உற்பத்தியில் கலப்படம் ஒரு பெரிய பிரச்சினையாகவும், அதிக பிரக்டோஸ் சோளம் சிரப் அல்லது அரிசி, மரவள்ளிக்கிழங்கு, கரும்பு மற்றும் பீட்ரூட் சிரப் ஆகியவற்றால் தேன் கலப்படம் செய்யப்படுவதாகவும், அவை விலை மலிவாக இருப்பதுடன், இயற்பியல்-வேதியியல் பண்புகளில் தேனை ஒத்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.


இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் நாட்டில் ‘இனிப்புப் புரட்சியைக் கொண்டு வரும் பிரதமருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.


இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அறிவித்த அளவுருக்களின் அடிப்படையில், தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDP) இந்த உலகத்தரம் வாய்ந்த ஆய்வகத்தை அனைத்து வசதிகளுடன் அமைத்து சோதனை முறைகள், நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது, அவை சோதனை மற்றும் அளவுத்திருத்த


ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் (NABL). அங்கீகாரம் பெற்றவை இப்போது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தேன், தேன் மெழுகு மற்றும் ராயல் ஜெல்லியின் புதிய தரங்களை அறிவித்துள்ளது.


தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (என்.டி.டி.பி) நடத்தி வரும் ‘அறிவியல் தேனீ உற்பத்தி குறித்த இரண்டு நாட்கள் ஆன்லைன் பயிற்சித் திட்டத்தையும்’ மத்திய வேளாண் அமைச்சர் திறந்து வைத்ததுடன், மேலும் அந்த திட்டத்தில் பங்கேற்றதற்காக பயிற்சியாளர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

11 views0 comments