திண்டிவனம் வேளாண்மை நிலையத்தில் வீரிய ஒட்டு ரக கம்பு கோ 9 அறிமுகம்


திண்டிவனம் : திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையம், வீரிய ஒட்டு ரகமான கம்பு 'கோ 9' அறிமுகம் செய்துள்ளது.திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையம் பருவநிலை மாற்றத்திற்கு தகுந்த மீள்தன்மையுள்ள வேளாண்மைஎன்ற நிக்ரா திட்டத்தை, அகூர் கிராமத்தில் 2017ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு புதிதாக வெளியிடப்பட்ட அதிக மகசூல் தரக்கூடிய பயிர் ரகங்கள், வறட்சியை தாங்கி வளரக்கூடிய ரகங்கள், கால்நடை தீவன ரகங்கள் மற்றும் நீர் மேலாண்மை முறைகளை அறிமுகப்படுத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்விளக்கம் அளித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் செயல்படக்கூடிய அகில இந்திய ஒருங்கிணைந்த சிறுதானிய ஆராய்ச்சி திட்டத்தின் மூலம் வறட்சியை தாங்கி மானாவாரியாக விளையக்கூடிய வீரிய ஒட்டு ரகமான கம்பு 'கோ 9' அறிமுகப்படுத்தி, ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இற்கான விழா திண்டிவனம் வேளாண்மை நிலையத்திலும் நடந்தது.நிகழ்ச்சியில், கம்பு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு அத்தியாவசிய இடுபொருள் வாங்கியதற்கான நிதியுதவியை, திட்ட ஒருங்கிணைப்பாளர் அன்புமணி வழங்கினார்

8 views0 comments