
தரிசு நில சாகுபடிக்கு மானியம்

தேனி: தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 5 ஆண்டு சாகுபடி செய்யாமல் தரிசாக உள்ள நிலங்களில் மீண்டும் விவசாயம் செய்ய ஏதுவாக நிலத்தை பண்படுத்தி சோளம், கம்பு, எள் பயிர் செய்வதற்கு மொத்த சாகுபடியில் 50 சதவீதம் அல்லது எக்டேருக்கு ரூ.1000 வழங்கப்படும். மாவட்டத்தில் 250 எக்டேர் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு மானியம் பெற சிட்டா, அடங்கல் பெற்று உதவி இயக்குனரிடம் விண்ணப்பிக்கலாம் என, வேளாண் இணை இயக்குனர் அழகு நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.