தண்ணீர் பற்றாக்குறையால் கவலையா? விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு


கோவை மாவட்டத்தில் பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தை, 5 ஆயிரத்து, 100 எக்டர் பரப்பில் செயல்படுத்திட, 45 கோடி ரூபாயும், துணை நிலை நீர் மேலாண்மை பணிகள் மேற்கொள்ள, 6 கோடியே, 88 லட்ச ரூபாயும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதமும் இதர விவசாயிகளுக்கு, 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், சொட்டு நீர், தெளிப்பு நீர், மழைத்தூவான் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன், நுண்ணீர் பாசனம் அமைத்த விவசாயிகள், மீண்டும் இத்திட்டத்தில் மானியம் பெற்று பயனடையலாம்.தமிழ்நாடு, நீர் பற்றாக்குறை உள்ள மாநிலம் என்பதால், பாசன வசதி ஏதும் இல்லாத இடங்களில், பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி, நுண்ணீர் பாசன முறையை அமைக்க, விவசாயிகள் முன்வரலாம்.இத்திட்டத்தில் சேர்ந்து பயன் அடையவும், மானியம் பெறவும் விரும்பும் விவசாயிகள், அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை, கோவை வேளாண்மை இணை இயக்குனர் சித்ரா தேவி மற்றும் துணை இயக்குனர் ஷபி அகமது ஆகியோர் தெரிவித்தனர்.

14 views0 comments

Recent Posts

See All

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 13 Subject Matter Specialist பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து நவம்பர் 5 ஆம் தேதிக்க