கால்நடை வளர்ப்பவர்களும் கடன் அட்டை பெறலாம்..! விண்ணப்பிப்பது எப்படி?

கால்நடை வளர்ப்பாளர்கள், எந்த அடமானமும் இல்லாமல் வங்கிகளில் குறைந்த வட்டியில் ரூபாய் 1.60 லட்சம் வரை கடனாக பெற, கால்நடை உழவர் கடன் அட்டை திட்டம் (Pashu Kisan Credit Card Scheme) உதவுகிறது. இந்த கால்நடை உழவர் கடன் அட்டையைப் பெற எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து இதில் தெரிந்துகொள்ளலாம்.

கால்நடை உழவர் கடன் அட்டை திட்டம் :

கால்நடை வளர்ப்பு என்பது வேகமாக வளர்ந்து வரும் விவசாயத் துறைகளில் ஒன்றாக இருந்து வருகிறது, பெரும்பாலான விவசாயிகள் தங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்காக விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கால்நடை துறையை மேம்படுத்தவும் கால்நடை துறையில் ஈடுபட விரும்புவர்களுக்கு உதவும் வகையிலும் கால்நடை உழவர் கடன் அட்டை திட்டம் (Pashu Kisan Credit Card Scheme) கடந்த 2019 ஆண்டு தொடங்கப்பட்டது.

கால்நடை விவசாயிகளுக்கான பயன்கள்:

இந்த கால்நடை உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ், கால்நடை வளர்ப்பாளர்கள் எந்த அடமானமும் இல்லாமல் வங்கியிலிருந்து ரூபாய் 1.60 லட்சம் வரையிலான தொகையை கடனாக பெற

இந்த கடன் அட்டைக்கு ஆண்டுக்கு 7 சதவிகிதம் என்ற குறைந்த வட்டி விகிதத்தில் வங்கி கடன் வழங்கப்படுகிறது.

கடன் தொகையை முறையாக செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத வட்டியினை மத்திய அரசு மானிய மூலம் வழங்கும். இதன் மூலம் விவசாயிகளுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 4 சதவீதமாக குறையும்.

கால்நடை உழவர் கடன் அட்டை வைத்திருப்பவர்கள் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த கடன் அட்டையை பெற கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும்.

கடன் அட்டை விண்ணப்பப் படிவத்துடன் , பூர்த்தி செய்து நில ஆவணம் ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் ஆகியவற்றை வழங்க வேண்டும்.

கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டதும், கால்நடை உரிமையாளர்களுக்கு இரண்டு எருமைமாடுகளை வாங்க கடன் வழங்கப்படும். அதனுடன் கடன் அட்டையும் சேர்த்து வழங்கப்படும்.

இந்த திட்டம் மூலம் எருமை மாடு, பசு மாடு மற்றும் ஆடு போன்றவற்றை வாங்கவும் கடன் உதவி வழங்கப்படுகிறது.

கால்நடை காப்பீடு திட்டம் 

நோய் மற்றும் இயற்கை சீற்றங்கள் காரணமாக இறக்கும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு பண இழப்பு ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு கால்நடைகளுக்கான காப்பீட்டு திட்டத்தையும் மத்திய மத்திய மாநில அரசுகள் நடத்தி வருகிறது. இதன் படி

வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ள விவசாயிகளுக்கும் 50 சதவிகித மானியத்தையும், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு 70 சதவிகித மானியத்தையும் காப்பீடாக அரசு வழங்கி வருகிறது.

காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகள் இறந்தால் 24 மணி நேரத்திற்குள் காப்பீட்டு நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டியது அவசியம். காப்பீடு மானிய விதிமுறைகள்

இரண்டரை வயது முதல் 8 வயது வரை உள்ள பசு மற்றும் எருமை மாடுகளுக்கு காப்பீடு செய்யலாம். ஒன்று முதல் மூன்று வயதுடைய வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் இந்த காப்பீடு திட்டத்தின் மூலம் காப்பீடு செய்யலாம்.

அதிகபட்சமாக ரூ.35,000 மதிப்புள்ள கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய மானியம் வழங்கப்படுகிறது. ஓராண்டு காப்பீடு கட்டனமாக கால்நடையின் மதிப்பில் 2% நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரூபாய் 35 ஆயிரத்துக்கும் மேல் காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு அதிகப்படியான மதிப்புக்கான காப்பீடு கத்தணத்தை கால்நடை உரிமையாளரே செலுத்த வேண்டும்.


ஒரு குடும்பத்திற்கு அதிக பட்சமாக 5 கால்நடைகள் இத்திட்டத்தில் காப்பீடு செய்யலாம்.


8 views0 comments

Recent Posts

See All

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 13 Subject Matter Specialist பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து நவம்பர் 5 ஆம் தேதிக்க