கால்நடைகளுக்கு தெம்பு தரும் அசோலா! வளர்ப்பு முறைகள் குறித்து ஆலோசனை


அதிக புரதச்சத்தும், கொழுப்புச்சத்தும், கால்நடைகளுக்கு தேவையான அமினோ அமிலங்கள் மிகுந்த அசோலாவை வளர்த்து, கால்நடை வளர்ப்போர் பயன்பெறலாம்,' என கால்நடைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.வறட்சி காலங்களில், கால்நடைகளுக்கு தீவனப்பற்றாக்குறை ஏற்படும் போது, பல்வேறு பிரச்னைகளை கால்நடை வளர்ப்போர் சந்திக்கின்றனர்.இப்பிரச்னைகளுக்கு தீர்வாக, அசோலா போன்ற தீவனங்களை, தாங்களாகவே உற்பத்தி செய்து, கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கலாம் என கால்நடைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.இது குறித்து அத்துறையினர் கூறியதாவது:அசோலா பெரணி வகையை சார்ந்த நீரில் மிதக்கும் தாவரமாகும். அசோலாவில், தழை, மணி, சாம்பல்,சுண்ணாம்பு, கந்தகம், மக்னீசியம், இரும்புச்சத்துகள் உள்ளன.அசோலா உற்பத்தி செய்ய, ஒரு குழியை உருவாக்கி, சில்பாலின்பாயை ஒரே சீராக பரப்பி, சீரான பள்ளமாக இருக்க வேண்டும். சில்பாலின் பாயின் மீது, 30 கிலோ செம்மண்ணை சம அளவில் பரப்பி, புதிய சாணம், 2 கிலோ தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும்.பின்னர், 30 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை, தண்ணீரில் கலந்து குழியில் ஊற்றவும். தண்ணீரின் அளவு, 10 செ.மீ., உயரும் வரை, 6 முதல் 9 குடம் வரை தண்ணீர் ஊற்ற வேண்டும். குடிநீரை மட்டும் பயன்படுத்தவும்.இறுதியாக, 200-500 கிராம் சுத்தமான அசோலா விதைகளை குழியில் போட்டு, அதன் மேல் லேசாக தண்ணீர் தெளிக்க வேண்டும். விதைத்த மூன்று நாட்களில், எடை மூன்று மடங்காக பெருகும். 15 நாட்களில், பசுந்தீவனமாக பயன்படுத்த அசோலா தாவரம் தயாராகி விடும்.நாளொன்றுக்கு அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை அறுவடை செய்யலாம். நாள்தோறும் குழியிலுள்ள அசோலாவினை கலக்கி விட்டு, ஐந்து நாட்களுக்கு ஒரு முறை, 2 கிலோ புதிய சாணம் மற்றும் 10 கிராம் சூப்பர் பாஸ்பேட் தண்ணீரில் கலந்து குழியில் ஊற்ற வேண்டும்.பத்து நாட்களுக்கு ஒரு முறை, மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை வெளியேற்றி, பதிலாக சுத்தமான தண்ணீரை நிரப்ப வேண்டும்.ஒரு கிலோ அசோலா உற்பத்தி செய்ய, 75 பைசா மட்டுமே செலவாகும். ஒரு கிலோ புண்ணாக்கு ஒரு கிலோ அசோலாவிற்கு சமமாகும். இத்தீவனத்தை அளிப்பதால், பால் உற்பத்தி 15-20 சதவீதம் அதிகரிக்கிறது. கோழி, முயல், வாத்து மற்றும் பால் உற்பத்தி மாடு, எருமைகளுக்கும் தீவனமாக அளிக்கலாம். இவ்வாறு, தெரிவித்தனர்.

16 views0 comments

Recent Posts

See All

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 13 Subject Matter Specialist பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து நவம்பர் 5 ஆம் தேதிக்க