
கிருஷ்ணகிரி ஒசூரில் சர்வதேச மலர் ஏல விற்பனை மையம்:
இந்தியாவிலேயே, முதன் முறையாக, ஓசூரில் அமையவுள்ள அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, மலர் ஏல மையம் அமைக்கும் பணிகளை, முதல்வர் இன்று துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில், 2,500 ஏக்கரில், ரோஜா, ஜெர்புரா, கார்னேசன், கிரசாந்திமம் உட்பட, ஆறு வகையான கொய்மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. . . இங்கு, 20 கோடியே, 20 லட்சம் மதிப்பில், கட்டமைப்பு வசதிகள், குளிர்சாதன கிடங்கு மற்றும் கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. இந்தியாவிலேயே, முதல் முறையாக, அதிநவீன வசதிகளுடன் ஓசூர் மோரனப்பள்ளியில், மலர் ஏல மையம் அமையவுள்ளது.ஒரு ரோஜாவுக்கு, 20 ரூபாய் வரை விலை கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால், மலர் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து, தங்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர். இந்த, உலகத்தர மலர் ஏல மையத்தால், அன்னிய செலாவணியும் அதிகரிக்கும் என்பது உண்மை.