காய்கறிகள், பழங்களை கிருமி நீக்கம் செய்ய வேண்டுமா? FSSAI அறிவுரை


கொரோனா நுண்கிருமி பரவலைத் தடுக்க, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களின் மேற்பரப்பை கிருமி நீக்கம் செய்ய வல்லுநர்கள் மீண்டும் மீண்டும் பரிந்துரைக்கின்றனர்.


நாம் உண்ணும் உணவு மூலம் கொரோனா தொற்று பரவுகிறது என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும்… பழங்கள், காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன்பு சரியாக கழுவ வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பழங்கள் மற்றும் காய்கறிகளை எவ்வாறு சுத்தம் செய்வது என்பது குறித்த சில வழிகாட்டுதல்களைக் கொண்டு வந்துள்ளது. பரிந்துரைகளை இங்கே காணலாம்:


* விற்பனையாளர்களிடமிருந்து வாங்கிய பழங்கள், காய்கறிகள் கொண்ட கவரை வீட்டில் தனியாக ஒரு இடத்தில் வைக்க வேண்டும்.* பழங்கள், காய்கறிகளை பின்பு நன்கு கழுவவும் (அ) 50 பிபிஎம் குளோரின் கொண்ட வெதுவெதுப்பான நீரில் மூழ்கி எடுக்கவும்.


* பின்பு, சுத்தமான குடிநீரில் அவற்றைக் கழுவவும்.


* கிருமிநாசினிகள், சோப்பு கலந்த தண்ணீர் போன்றவைகளை காய்கறிகளில் பயன்படுத்த வேண்டாம்.


* மிகவும் தேவையான பழங்கள், காய்கறிகளை மட்டும் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். மீதமுள்ளவற்றை சாதாரண அறை வெப்ப நிலையில் வைத்துக் கொள்ளலாம்.

2 views0 comments