
கருவேல மரங்களை அகற்றிவிவசாயம் செய்ய ஆலோசனை

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டத்தில் காட்டு கருவேல மரங்களை அகற்றி விவசாயம் செய்ய சத்திரக்குடி வட்டாரவேளாண்மை உதவி இயக்குனர் கதிரேசன் ஆலோசனை கூறினார்.
அவர் கூறியதாவது:மாவட்டத்தில் காட்டு கருவேல மரங்களை அகற்றி சிறுதானிய பயிர்களை பயிரிட ஊக்குவிப்பு செய்யப்படுகிறது. இதற்காக தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 5ஆண்டுகளாக தரிசாக கிடக்கும் நிலங்களை விளை நிலங்களாக மாற்றிபயிர் செய்யும் நோக்கில், விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாகெஹக்டேருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இத்திட்டத்தில் ஒரு கிராமத்தில் 10 ெஹக்டேர் தரிசு நிலங்களில் காட்டு கருவேல மரங்களை அகற்றி விளை நிலங்களாக மாற்ற வேண்டும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ெஹக்டேர் மானியம் வழங்கப்படும்.இவ்வாறு கூறினார்.