கயிறு பொருள்கள் ஏற்றுமதியில் புதிய சாதனை


நாட்டின் கயிறு பொருள்கள் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் முன்னெப்போதும் இல்லாத சாதனை அளவை எட்டியுள்ளது. இதுகுறித்து மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் கூறியுள்ளதாவது:


கடந்த 2018-19 நிதியாண்டில் கயிறு பொருள்களின் ஏற்றுமதி அளவின் அடிப்படையில் 96,404 கோடி டன்னாக காணப்பட்டது. இந்த நிலையில் அதன் ஏற்றுமதி கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2019-20 நிதியாண்டில் 98,899 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. மதிப்பின் அடிப்படையில் இவற்றின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் ரூ.2,728.04 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.2,757.9 கோடியை எட்டியது. இது முன்னெப்போதும் எட்டப்படாத சாதனை அளவு ஏற்றுமதியாகும்.தென்னை நாா்கழிவுகள், குஞ்சமுள்ள விரிப்புகள், தென்னை நாரில் தயாரிக்கப்பட்ட சுற்றுச் சூழலுக்கேற்ற ஜவுளி ரகங்கள், சுருள் விரிப்புகள், தரை விரிப்புகள், கயிறு வகைகள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் சிறப்பான ஏற்றத்தை சந்தித்துள்ளது.தென்னை நாா்கழிவு ஏற்றுமதி மூலமாக கிடைத்த வருமானம் கடந்த நிதியாண்டில் 49 சதவீதம் அதிகரித்து ரூ.1,349.63 கோடியானது. மொத்த ஏற்றுமதியில் 18 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ள தென்னை நாா் ஏற்றுமதி ரூ.498.43 கோடியை எட்டியது.


கயிறு பொருள்கள் ஏற்றுமதியில் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளின் பங்களிப்பு 33 சதவீதமாக இருந்தது. இதில் நூற்குஞ்சமுள்ள பாய்களின் மதிப்பு மட்டும் 20 சதவீதம் அளவுக்கு இருந்தது கவனிக்கத்தக்கது.ஏற்றுமதி மட்டுமின்றி உள்நாட்டு சந்தையிலும் தென்னை நாா்கழிவில் செய்யப்பட்ட பொருள்களின் விற்பனை அமோகமாகவே இருந்தது.மொத்த தென்னை நாா் பொருள்கள் ஏற்றுமதியில் 99 சதவீதம் தூத்துக்குடி, கொச்சி, சென்னை துறைமுகங்கள் வழியே நடைபெற்றுள்ளது. இதைத் தவிர, விசாகப்பட்டினம், மும்பை, கொல்கத்தா துறைமுகங்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.


6 views0 comments

Recent Posts

See All

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 13 Subject Matter Specialist பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து நவம்பர் 5 ஆம் தேதிக்க