
ஆர்கானிக் சான்று பெற்றால் பயன்கள் ஏராளம்! விவசாயிகளுக்கு நல்ல வாய்ப்பு

கோவை:''ஆர்கானிக் சான்று பெற்ற விவசாயியாக மாறினால், விளைபொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும்; ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும்,'' என, சான்றளிப்புத்துறை இயக்குனர் சுப்பையா தெரிவித்தார்.பயிர் சாகுபடிக்கு ரசாயன உரம், பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால், மனித குலம் மட்டுமின்றி, உலகில் வாழும் உயிர்கள் அனைத்துமே கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றன.நிலம், நீர், காற்றும் கடுமையாக மாசுபடுகிறது.
இதற்கு தீர்வு காணும் நோக்கத்துடன் தான், உலக நாடுகள் அனைத்தும் ஆர்கானிக் பயிர் சாகுபடியை முன்னெடுக்கின்றன.நம் நாட்டிலும் மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் அளித்து, ஆர்கானிக் சாகுபடிக்கு மாறும் விவசாயிகளை ஊக்குவித்து வருகின்றன.